Thursday, June 18, 2009

தர்மம் அழிந்து அதர்மம் தலைதூக்கும் போது நான் யுகம் தோறும் அவதரிப்பேன்தர்மம் அழிந்து அதர்மம் தலைதூக்கும் போது நான் யுகம் தோறும் அவதரிப்பேன் என்றான் கண்ணன்...... ஆமாங்க கண்ணன் மீண்டும் "வராக" மைந்தனாக அவதரித்து விட்டான். இம்முறை காப்பதற்கு அல்ல அழிப்பதற்கு. ஸ்வைன் ஃபுளூ என்னும் திரு நாமத்துடன் அவதரித்து விட்டான். துனிலும் இருப்பவன் துரும்பிலும் இருப்பவன் இன்று உலகெங்கும் அவதரித்து விட்டான். எவ் எவ் நாடுகள் அதர்மத்திற்கு ( தமிழனுக்கு எதிராக ) துணைபோனதோ அங்அங்கே எல்லாம் அவதரித்து விட்டான். சரி நாம் விடயத்திற்கு வருவோம்.

ஸ்வைன் ப்ளூஎன்றால் என்ன ?இது பன்றிகளில் இருந்து மனிதனுக்குப் பரவுவதால் பன்றிக் காய்ச்சல் ( அதுதானுங்க பன்றிக்கு ஸ்வைன் என்ற பெயரும் இருக்கின்றாங்க ) எனப்படுகின்றது. விசேசம் என்னண்டா உருமாறும் திறன் கொண்ட ஆர்என்ஏ ஜீன்களின் அடிப்படையில் உருவான வைரஸ் மூலம் பரவும் நோய்தான் இந்த ஸ்வைன் ஃப்ளூ. ரிபோ நியூக்ளிக் ஆசிட் எனப்படும் ஆர்என்ஏவை (டிஎன்ஏ மாதிரி) தனது ஜெனிட்டிக் மெட்டீரியலாக (ஜீன்) கொண்ட வைரஸ்கள் உருவாக்கும் நோய்கள் தான் இந்த பன்றிக்காச்சல். ஸ்வைன் ப்ளூவுக்கு காரணமான H1N1 வைரஸ்இரண்டுபுரோதங்களால் ஆனது. அவற்றில் ஒன்று H எனப்படும் ஹேமக்குளேட்டனின் மற்றொன்று N எனப்படும்நியூராமினிடேஸ் என்ற புரதமாகும். அந்தவைரசின் பெயரில்இருக்கும் எண்கள் அதன்வகையை குறிக்கிறது. இந்த வைரசின் D N A சோதனையிட்டதில் வட அமெரிக்க பன்றிகளில் காணப்படும் வைரசில் உள்ள சில ரசாயனங்களும், அதே நேரத்தில் ஐரோப்பிய பன்றிகளில் காணப்படும் வைரசின் சில வேதிப் பொருட்களும் இருப்பது தெரியவந்துள்ளது. ஆக இந்த வைரஸ் ஐரோப்பாவிலிருந்து தான் மெக்சிகோ-வட அமெரிக்காவுக்கு வந்திருக்க வேண்டும் என்கிறார்கள். ஆனால் எவ்வாறு ஐரோப்பாவிலிருந்து வட அமெரிக்காவுக்கு வந்தது என்ற கேள்விக்கு விடை தேட முனைகையில் விசா இல்லாமல் கண்டங்கள் தாவும் பறவைகள் தான் இங்கு காவிகளாக செயல்பட்டுள்ளன. பன்றிகளுக்குள் நுழைந்துவிட்டால் அதன் சுவாசப் பாதையில் வலம் வரும் இந்த வைரஸ் முதலில் பன்றிகளைக் கொல்லும்.அனேகமாக ஒரு வைரஸ் மனிதனுக்குள் புகுந்துவிட்டால் அதை மனிதனின் தற்காப்பு சிஸ்டம் (Immune system) அழித்துவிடும். ஆனால், இந்த மியூட்டேசன் எனப்படும் உருமாறும் திறன் மூலம் மனிதனின் தற்காப்பு சிஸ்டத்தை வென்று விடுகிறது இந்த வைரஸ். இதன் காரணமாகத்தான் இவ் நுன்அங்கி இன்று பல்கிப்பெருக் வளர்ந்துள்ளது. இந்த வைரஸ் தாக்கினால் காய்ச்சல், தலைவலி, உடல் வலி, குளிர் காய்ச்சல், தொண்டை வலி, வயிற்றுப் போக்கு, வாந்தி போன்றவை ஏற்படும். கவனிக்காமல் விட்டால் பெரும் ஆபத்தை ஏற்படுத்தலாம். இந் நிலையில் இந்த வைரசுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணியில் உலகின் முன்னணி மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் இறங்கியுள்ளன.உதாரணமாக இங்கிலாந்தின்ஹெர்ட்போர்டுஷையர்நகரில் இருக்கும் தேசியஉயிரியல் தரக்கட்டுபாடுநிறுவனத்தை சேர்ந்தவிஞ்ஞானிகள் தற்போதுஅதிவேகமாக ஆராய்ச்சிசெய்து வருகின்றனர். அவர்கள் இதற்காக எடுத்துக் கொன்டது முட்டையாகும். என்னது ஆச்சரியமாக இருக்கா? ஆம் அவர்கள் இவ் நுன் அங்கிகளை வளர்க்கும் ஒரு இடமாக இவ் முட்டையை பயன்படுத்துகின்றனர். அவர்கள் இவ் நுன் அங்கிகளை இரண்டு வகையாக பரிசோதிக்க உள்ளனர். இதற்கு அவர்கள் ரிவர்ஸ் ஜெனிட்டிக்ஸ் என பெயரிட்டுள்ளனர். இதில் H மற்றும் N புரோதங்களை தனியாக பிரித்து, அவற்றை PR8 என்ற வைரசின் உதவியுடன் மீண்டும் இணைக்கின்றனர். இதன் மூலம் கிடைக்கும் நோய் தன்மையற்ற ஒட்டு வைரஸ்ஆல் மருந்து தயாரிக்க திட்டமிட்டுள்ளனர். மற்றொரு முறையில் H1N1 மற்றும் PR8 இரண்டையும் ஒரே சமயத்தில் முட்டைக்குள் போட்டு, அவற்றை இயற்கை வழியில் ஜீன் மாற்றம் அடைய செய்து, அதன் மூலம் உருவாகும் புதிய ஒட்டு வைரசிலிருந்து மருந்து தயாரிக்க இருக்கின்றனர். ஆனால் இதை தயாரிக்க இன்னும் சில மாதங்கள் தேவைப்படலாம்....

3 comments:

தங்க முகுந்தன் said...

அருமையான முதற்பந்திக்கு
அற்புதத்திற்கு
எனது வாழ்த்துக்கள்!
தொடரட்டும் உங்கள் எழுத்துப் பணி!

மானுடம் said...

நண்றி முகுந்தன்....

தேவன் மாயம் said...

அருமையான கட்டுரை!!

Post a Comment