Thursday, January 21, 2010

கெயிட்டியும் ஈழமும்

27,750 square kilometres பரப்பளவு கொண்ட கெயிட்டி இன்று உலகம் முழுவதையும்தன் பக்கம் இழுத்துள்ளது. கெயிட்டியானது முதலாவது கருப்பின குடியரசுநாடாகும்.முற்று முழுவதுமாக அடிமைகளின் புரட்சியால் அமைக்கப்பட்டமுதலாவது நாடுமாகும்.டூசான் லூவர்சூர் என்ற புரட்சியாளரினால் கெயிட்டியப்புரட்சி முன்னெடுக்கப்பட்டது. அத்துடன் இது இலத்தீன் அமெரிக்காவில்விடுதலையை அறிவித் முதலாவது நாடாகும். ஜனவரி 1, 1804 இல் இது தனதுவிடுதலையை அறிவித்தது.இங்குள்ள கிட்டத்தட்ட 95% மக்கள்ஆபிரிக்காவிலிருந்து குடிபெயர்ந்தவர்கள். இதன் மக்கள் தொகை9,751,000. (2008 ) ரோமன் கத்தோலிக்க மதமே இங்கு அதிகாரபூர்வமான மதமாகும்கிட்டத்தட்ட 80-85%. மிக வறிய நாடாக கருதப்படும் கெயிட்டியானது 182 நாடுகளின் தரவரிசையில் 149 வதாக உள்ளது.இங்கு 65.9% ஆனோர் படிப்பறிவுஅற்ற வர்க்கத்தினர்.ஆட்சி மொழியாக பிரெஞ்சு, ஹையிட்டிய கிரெயோல் ஆகியஇரண்டு மொழிகளும் காணப்படுகின்றன."ஒற்றுமை வலிமையைத் தரும்" எனும்தாரக மந்திரத்தை குறிக்கோளாக கொண்டமைந்த நாடே கெயிட்டியாகும்.

இரத்தம் சிந்திப்பெற்ற இந்த நாடு இன்று இரத்த வெள்ளமாக காட்சி அளிக்கின்றது. ஜனவரி 13,2010 அன்று எயிட்டியில் உள்ளூர் நேரம் 1653 (2153 கிரீன்விச்) பெருநிலநடுக்கம் நிகழ்ந்தது. இந்த நிலநடுக்கம் 7.3 ரிக்டர் எனஅளவிடப்பட்டுள்ளது.இதில் லட்ச கணக்கானோர் உயிரிழந்தனர்.என்னவென்றுஅறியாமல் அங்குள்ள மக்கள் சிந்திக்க நாதியற்று வாழ்கின்றனர்.உண்ணஉணவிண்றி பல்லாயிரம் மக்கள் இன்று மீண்டும் ஆயுதம் ஏந்தவெளிக்கிட்டுள்ளனர். இவர்களுக்கு உணவு,உதவிகளை பங்கிடுவதற்குஇராணுவத்தை அனுப்ப வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பழய கறையைநீக்குவற்கு இதுதான் சந்தர்ப்பம் என அமெரிக்காவும் தன்னால் இயன்றஉதவிகளை இன்று மேற்கொண்டுள்ளது. முன்னாள் அதிபர்களான ஜோர் டபிள்யூபுஸ், பில் கிளின்டன் ஆகிய இருவரையும் இதற்காகநியமிக்கப்பட்டுள்ளனர்.இருவரும் இணைந்து அமெரிக்க மக்களிடம் பாரியநிதியை திரட்டவுள்ளனர். ஆனாலும் மீட்பு பனிக்காக இவர்கள் செலவிடும் நேரம்ஆமை வேகத்திலுள்ளது.எவ்வாறு எனினும் இன்று உலகம் முழுவதும் இறந்தஒரு லட்சம் பேருக்காக கண்ணீர் அஞ்சலிகளும் உதவிகளும் குவிந்த வண்ணம்உள்ளது.

ஒருசில வினாடிகளில் யாருக்கும் தெரியாமல் ஏற்பட்ட இந்த அழிவுக்காக (இறந்தவர்கள் பலர் கூட சிறிது நேர வலியையே உணர்நதவர்கள்) முதளைக்கண்ணீர் வடிக்கும் இந்த உலகம் ஏன் ஈழத்தில்
ஒரு லட்சம் பேர் துடிக்கதுடிக்க மரண வலியை மாதக்கணக்கில் அனுபவித்தவர்களை காப்பாற்ற ஒருதுருப்புச்சீட்டையேனும் போட மறந்தனர் ?? பல்லாயிரக்கணக்கான மக்கள்கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கி தவிக்கின்றனர் என்று நிமிடத்திற்கு நிமிடம்ஆய்வறிக்கை விடும் பத்திரிகைகளும் தொலைக்காட்சி அலைவரிசைகளும் ஏன்பல லட்சம் மக்கள் இரசாயன குண்டுகளாலும் பல்வேறுபட்ட ஆயுததாக்குதலிலும் சிக்கி தவிக்கும்போது ஒரு ஆய்வறிக்கையேனும் வெளியிடமறுத்ததேன்???

இறைவனுக்கே வெளிச்சம்.........

ஆனாலும் .....
எங்கேயே இழப்பு ஏதும் ஏற்பட்டால் உடனே கண்ணீர் வடிக்கும் தமிழன் சார்பாக கண்ணீர் அஞ்சலியையும் கெயிட்டி மக்களுக்காக சமர்ப்பிப்போம்