Tuesday, June 16, 2009

உங்க முன்னால் சிவாஜி....

என்ன எல்லோரும் அதிசயமா பாக்கிறிங்களா ? ஆமாங்க உங்க முன்னாடி நடிகர் சிவாஜி வந்தா எப்படி இருக்கும் . ஜீன்ஸ் படத்தில் "கண்ணோடு காண்பதெல்லாம் தலைவா " என்ற பாடலில் ஜஸ்வர்யா இரட்டை வேடத்தில் நடிப்பதற்கு ராஜு சுந்தரம் அமெரிக்காவிலிந்து கொண்டு வந்த புரெஜக்ற்ரர் மூலம் இன்னுமொரு ஜஸ்வர்யாவை உருவாக்கி அனைவரையும் வியப்பில் ஆழ்த்துவார். ஆம் அங்கு ராஜு சுந்தரம் பயன்படுத்திய தொழில் நுட்பம் முப்பரிமாணத் [3D] தொழில்நுட்பமாகும்.
இனி
நாம் விடயத்திற்க வருவோம். திரை ( screen) இல்லாம எமக்கு முன் ஒரு படம் பார்க்க முடியுமா ? ஆம் திரையே இல்லாமல் நாம் படம் பார்க்க முடியும். சரி நாம் முப்பரிமான காட்சி ஒன்றை எவ்வாறு காண்கிண்றேம். ஒரு படத்தை (photo)எடுத்துக்கொண்டால் அவ் படத்தை பல மில்லியன் புள்ளிகளாக உடைக்கப்பட்டு அவ் புள்ளிகளுக்கான ஒளிக்கீற்றை திரையில் அவ் அவ் இடங்களில் விழச்செய்யப்படுகின்றது. இவ்வாறு விழும் ஒளிக்கற்றை புள்ளிகளாக உருவாக்கப்படும். இவ்வாறு தோன்றும் பல புள்ளிகள் திரையில் படத்தை தோற்றுவிக்கின்றது. ஆனால் திரை இல்லாமல் எவ்வாறு படத்தை தோற்றுவிக்க முடியும்? ஒரு பக்கத்திலிருந்து ஒளிக்கீற்றை பாய்ச்சி அடிக்காமல், சுற்றி வர எல்லாப் பக்கத்திலிருந்தும் ஒளிக்கீற்றைப் பாய்ச்சி அடித்தால் ? எவ்வாறு எனில் ஒரு வட்டமாக ஒளிக்கீற்று பாய்ச்சிகளைப் (projector) பொருத்த வேண்டும். நடுவில் பிம்பம் தெரிய வைக்கமுடியும். இது ஒரு முப்பரிமாண பிம்பத்தை உருவாக்கும். அதாவது எங்கே படம் உருவாக வேண்டுமோ அதை நோக்கி இந்த ஒளிக்கீற்று பாய்ச்சிகளை பாய்ச்ச வேண்டும். இவ்வாறு இரண்டு
மூன்று ஒளிக்கீற்றுகள் ஒரு புள்ளியில் சந்திக்கும்போது அதில் ஒரு புள்ளி உருவாகும். இவ்வாறு பல புள்ளிகளை தோன்ற வைத்து ஒரு படத்தை உருவாக்கலாம். சரி இவ் ஒளிக்கீற்று ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் வேறு ஒரு ஒளிக்கீற்றை சந்தித்தால் விழைவு ???.... தெளிவற்ற படங்கள். இதை தவிர்க்க இவ் ஒளிக்கீற்றுகளை மூண்று தள ஒளிக்கீற்றாக அதாவது X, Y மற்றும் Z என்று மூன்று விதமான ஒளிக்கீற்றுகளை உருவாக்கலாம். இந்த மூன்று வித்தியாசமான விஞ்ஞான பூர்வமான ஒளிக்கீற்றுகள் ஒன்றோடொன்று சந்திக்கும்போது ஏதாவது விஞ்ஞான மாற்றம் ஏற்பட்டோ அல்லது ஏற்படாமலோ புள்ளிகள் உருவாக வைக்கமுடியும். இதன் மூலம் தவறுதலாக புள்ளிகள் உருவாகுவதைத் தவிர்க்கலாம். இது ஒரு முற்று முளுதான தீர்வு அல்ல. ஏனெனில் இவ் X, Y மற்றும் Z என்று மூன்று விதமான ஒளிக்கீற்றுகள் புள்ளியை உருவாக்கியவுடன் மறையப் போவது இல்லை. அவை முடிவற்ற பயனத்தில் இருப்பவை. எனவே அவை புள்ளியை உருவாக்கியவுடன் அவை அழிந்து போகக்கூடியவாறு உருவாக்கப்படல் அவசியமாகும்.
உதா
ரணமாக..
இவ்வாறு உருவாக்கப்பட்டால் மக்கள் எந்தப்பக்கத்திலிருந்தும் படங்களை பார்க்க முடியும். இனி என்ன வருங்கலத்தில் உங்க முன்னால் சிவாஜி வந்து கை கொடுத்தாலும் ஆச்சரியப்பட தேவையில்லை.

3 comments:

சுபானு said...

பயனுள்ள தகவல். தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்.. :)

வலசு - வேலணை said...

சும்மா கலக்குறியே தல :-)

மானுடம் said...

நண்றி......

Post a Comment